நீடாமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

நீடாமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த பூவனூர் பண்டாரஓடையை சேர்ந்தவர் சேகர் (வயது 51) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள போர்ஷெட்டுக்கு குளிக்க சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பிளை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அவரது உறவினர் கமலதாசன் (45) என்பவர் அதிர்ச்சியடைந்து சேகரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது.

தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோனை செய்து சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கமலதாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com