அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே உள்ள பெரிய மூக்குடியை சேர்ந்தவர் இளங்கோ(வயது 52). விவசாயி. இவரது வீட்டில் உள்ள தண்ணீர் உறிஞ்சும் மோட்டார் பழுதடைந்தது. அதனை சரிசெய்ய இளங்கோ, மோட்டாரை பிரித்து சுவிட்ச் போர்டில் மின்சார வயரை சொருகி வேலை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com