பட்டுக்கோட்டை அருகே மின் கம்பியை மிதித்த விவசாயி பலி

பட்டுக்கோட்டை அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி கருப்பையா.
மின்சாரம் தாக்கி இறந்த விவசாயி கருப்பையா.
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே பண்ணைவயல் சாலையில் நைனாகுளம் பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தவர் கருப்பையா (வயது 50), நேற்று மாலை வழக்கம்போல வயலுக்கு சென்றபோது அவரது வயலுக்கு மேலே சென்ற மின்சார ஒயர் அறுந்து விழுந்து கிடந்தை கவனிக்காமல் அதன் மீது காலை வைத்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின்வாரிய ஊழியர்களை வரவலைத்து மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர் கருப்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக் கோட்டை அரசு மருத்து வனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com