பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பாவூர்சத்திரம் அருகே அறுந்து கிடந்த மின்வயரை மிதித்த விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அரிகேசவ மாதவன், விவசாயி. இவர் நேற்று மாலை அவரது வயலுக்கு தக்காளி பறிப்பதற்காக சென்றார். அங்கு அவர் தக்காளி பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்வயர் மீது கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து வந்து அரிகேசவ மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com