அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி டிப்ளமோ என்ஜினீயர் பலி

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள செருமாக்கநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் விஜய்(வயது 26). இவர், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நேற்று அதிகாலை இவர்களுக்கு சொந்தமான செங்கல் சூளை அடுப்புகளில் விறகுகள் வைத்து எரிக்கும் பணியை ஆட்கள் செய்து கொண்டு இருந்தனர். விஜய்யும் அவர்களுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது விறகுகளை அடுப்பில் தள்ளும் நீளமான இரும்பு கம்பியை தூரத்தில் எடுத்து வைப்பதற்காக விஜய் எடுத்து சென்றார். அந்த கம்பி எதிர்பாராதவிதமாக மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியது. இதில் கம்பி வழியாக விஜய் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com