வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

வலங்கைமான் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அனியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது61). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள லாயம் மெயின் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்திரசேகரபுரம் மேல தெருவை சேர்ந்த ராஜகோபால் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பரமசிவம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com