

புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். மூத்த வக்கீலான இவர், மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரானார். இதற்காக ரூ.1 கோடி வக்கீல் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பினார்கள்.
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்தார். இந்த தடையை நீக்கக்கோரி அமலாக்கத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தனி நீதியதியின் உத்தரவுக்கு தடை விதித்ததோடு, புதிய சம்மனை அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது. #NaliniChidambaram