2 வாத்துக்களை காணோம் கண்டு பிடிச்சி தாங்க - போலீசில் பெண் புகார்

‘திருட்டுப்போன 2 வாத்துக்களை கண்டுபிடித்து மீட்டு தாருங்கள்’ என்று போலீசில் பெண் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாத்துக்கள்
வாத்துக்கள்
Published on

ஈரோடு:

ஈரோடு ஆணைக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கோமதி என்ற குப்பாயாள் (வயது 50).

இவர் தனது மாட்டு தொழுவத்தில் வாத்துக்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் அந்தியூர் குருநாதசாமி கோவிலுக்கு சென்று விட்டு திரும்ப வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவர் வளர்த்து வந்த வாத்துகளில் 2 வாத்துகளை காணவில்லை. இதை யாரோ திருடி கொண்டு போய் இருக்கக்கூடும் என்று கருதிய குப்பாயாள் இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார்.

அதில் ‘‘நான் மாட்டு தொழுவத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் வாத்துகளையும் வளர்த்தேன். இதில் 2 வாத்தை திருடி சென்று விட்டனர். அதை கண்டுபிடித்து வாத்துகளை மீட்டு தாருங்கள்’’ என்று கூறி இருந்தார்.

இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com