டி.எஸ்.கே. பென்ட்லி சப்-500சிசி மோட்டார்சைக்கிள்: விரைவில் இந்தியாவில் அறிமுகம்

டி.எஸ்.கே. பென்ட்லி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் புதிய 302R சார்ந்த தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
டி.எஸ்.கே. பென்ட்லி சப்-500சிசி மோட்டார்சைக்கிள்: விரைவில் இந்தியாவில் அறிமுகம்
Published on

புதுடெல்லி:   

இந்தியாவில் டி.எஸ்.கே. பென்ட்லி தனது 500 சிசிக்குள் இருக்கும் மாடல்களை பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் பென்ட்லி 302R எனும் புதிய மாடலை இந்தியாவில் வெளியிட உள்ளது. ஜூலை 25-ம் தேதி இந்தியாவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய மாடலை வாடிக்கையாளர்கள் ரூ.25,000 குறைந்த தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம். 

பென்ட்லி நிறுவனத்தின் துவக்கநிலை மாடலான 302R முழுமையான ஸ்போர்ட்ஸ் மாடல் ஆகும். இந்த பைக் 300சிசி இரண்டு-சிலிண்டர், வாட்டர் கூல்டு, ஃபோர்-ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்டுள்ளது. இதன் யுனிட் 37 hp அதிகபட்ச செயல்திறன் மற்றும் அதிகபட்சம் 27 Nm பீக் டார்கியூ வழங்கப்பட்டுள்ளது. 

6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ள பென்ட்லி 302R தலைகீழான ஃபோர்க்களும், மாற்றக் கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு TNT 300 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் வெளியாக இருக்கும் 302R டிரெஸ்டில் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளதால், கட்டுப்படுத்துவதும், செயல்திறன் மற்றும் அனைத்து வித சாலைகளிலும் சீராக இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பென்ட்லி 302R 196 கிலோ எடை கொண்டிருக்கும் என்றும் இதன் முன்பக்கம் மற்றும் பின்புற ABS பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் புதிய முன்பக்க வடிவமைப்பு கொண்டுள்ளது. 

இந்திய சந்தையில் பென்ட்லி 302R, ரெட் மற்றும் வைட், ரெட் மற்றும் பிளாக், கிரீன் மற்றும் சில்வர் என நான்கு வித நிறங்களில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் புதிய பென்ட்லி 302R விலை ரூ.3.5 லட்சத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. இந்த விலையில் பென்ட்லி பைக் எமகா YZF-R3, கே.டி.எம். RC390 மற்றும் கவாசகி நின்ஜா 300 உள்ளிட்ட பைக்களுக்கு போட்டியாக அமைய உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com