ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
Published on

ஆரணி:

ஆரணிஅடுத்த பையூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆரணி-வழைப்பந்தல் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் கிருஷ்ணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி மற்றும் தாலுகா போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com