மத்திய தரைக்கடலில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 30 பேர் பலி

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

ரோம்:

லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வளைகுடா நாடுகளில் இருந்து உள்நாட்டு போர் மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாதுகாப்பில்லாத படகு பயணங்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். சிறிய படகுகளில் அளவுக்கு அதிகமானோர் பயணம் மேற்கொள்வதால் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுவது தொடர் கதையாகிவிட்டது.

இந்நிலையில், லிபியாவில் இருந்து சுமார் 500 முதல் 700 பேர் அகதிகளாக மத்திய தரைக்கடலில் மரப்படகு மூலம் ஐரோப்பிய நாடான இத்தாலியை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். லிபியா கடல் எல்லையிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நேற்று படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது. இதில், படகிலிருந்த 200 பேர் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் கடலில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 3 குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கும் பணியில் இத்தாலிய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com