சிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்த டாக்டர் கைது

மயிலாப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்த டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
சிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போனில் படம் எடுத்த டாக்டர் கைது
Published on

சென்னை:

சென்னை மயிலாப்பூரில் டாக்டர் சிவகுருநாதன் (64) என்பவர் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். எம்.டி. ஜெனரல் மருத்துவ படிப்பு முடித்த அனுபவம் வாய்ந்த இவரிடம் பல்வேறு பகுதியில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்வார்கள். திருவள்ளூரை சேர்ந்த பெண் ஒருவரின் தாய் வீடு மயிலாப்பூரில் உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் டாக்டர் சிவகுருநாதனிடம் சிகிச்சை பெற நேற்று சென்றார்.

டாக்டரிடம் பிரச்சனைகளை எடுத்து கூறிய அந்த பெண்ணை பரிசோதனை செய்வதற்காக அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்தார். அப்போது தனது செல்போனில் அந்த பெண்ணை ரகசியமாக படம் பிடித்துள்ளார். அவரது உடல் ஆடையை கலைந்து படம் பிடித்ததை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். சிகிச்சை அளிக்க கூடிய டாக்டர் எதற்காக செல்போனில் படம் பிடிக்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர் சிவகுருநாதன் வைத்திருந்த செல்போனை ஆய்வு செய்தனர். அதில் அந்த பெண்ணின் படம் பதிவாகி இருந்தது. இதையடுத்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ‘மெமரிகார்டை’ போலீசார் சோதனை செய்தனர். மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பெண் நோயாளிகளை படம் பிடித்த காட்சிகள் இருந்துள்ளது.

கைது செய்யப்பட்ட டாக்டருக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் 2 மகள்கள் டாக்டர் ஆவார்கள். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com