மேகதாது அணைகட்ட அனுமதிக்க கூடாது- சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல்

மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது. #MekedatuDam
மேகதாது அணைகட்ட அனுமதிக்க கூடாது- சமத்துவ மக்கள் கழகம் வலியுறுத்தல்
Published on

சென்னை:

சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகா மாநிலத்திலுள்ள மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசும், தமிழக விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகதாதுவில் புதிதாக அணை கட்டும் திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும்.

மத்திய அரசு, மேகதாதுவில் அணை கட்ட வழங்கியுள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசும் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். #MekedatuDam

X

Maalai Malar
www.maalaimalar.com