சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவார்: திமுக தலைமை

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ அப்பாவு, சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அப்பாவு
அப்பாவு
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 7-ந்தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 33 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

திமுக-வின் பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிடுவார் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.

தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள பிச்சாண்டி சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com