ஓமலூர் அருகே திமுக ஆலோசனை கூட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி ஊராட்சி தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
ஓமலூர் அருகே திமுக ஆலோசனை கூட்டம்
Published on

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பல்பாக்கி ஊராட்சி தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் ஊராட்சி அவைத்தலைவர் ராஜாமணி தலைமையில் பல்பாக்கி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் ஊராட்சி பொருப்பாளர் செந்தில் குமரன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மதிவாணன், ஒன்றிய துணை செயலாளர் மணி, ஒன்றிய பொருளாளர் ரமேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, தெற்கு ஒன்றிய தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் 5 முறை முதல்வராகவும். 50 ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து தி.மு.க வை கட்டிக்காத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது, பதினான்கு வயதில் இருந்து பொதுவாழ்வில் இருந்து பல முறை சிறை சென்று தி.மு.க வில் பல்வேறு பதவிகளை அடைந்து தற் போது தி.மு.க தலைவராக பொறுப்பேற்றுள்ள தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஊராட்சி கழகம் சார்பில் வாழ்த்து தெரிவிப்பது, ஆளும் அ.தி.மு.க ஊழல் அரசை கண்டித்து வருகிற 4-ந் தேதி ஓமலூர் பேருந்து நிலையத்தில் நடைபெறும் கண்டன பொதுக் கூட்டத்திற்கு பல்பாக்கி ஊராட்சி கழகத்தில் இருந்து 200 பேர் கலந்து கொள்வது என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, ஜெயவேல், சதாசிவம், மற்றும் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com