பஸ் கட்டண உயர்வை கண்டித்து கரூரில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கரூரில் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து கரூரில் தே.மு.தி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்:

பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் தலைமை தாங்கி பேசினார். முன்னதாக மாவட்ட அவை தலைவர் அரவை எம். முத்து வரவேற்றார். மாநில மகளிரணி செயலாளர் மாலதி வினோத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, மக்கள் விரோத அ.தி.மு.க. அரசை எதிர்க்கும் தைரியம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தவிர யாருக்கும் கிடையாது. மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் தே.மு.தி.க. மட்டும்தான். உயர்த்திய பஸ் கட்டணத்தை  தமிழக அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளி அணி செயலாளர் பவர்டெக்ஸ் செல்வராஜ், நகர செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர்கள் கடவூர் சிவம் ராஜேந்திரன், ஜெயக்குமார்,  மாவட்ட துணை செயலாளர் சோமூர் ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன் சுப்பையா, ரெங்கநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சதாசிவம், ஆல்வின், மாணவரணி நவநீத கிருஷ்ணன் மற்றும் திரளான தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் அரிவின்ஸ் நன்றி கூறினார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com