விஷம் குடித்து வாலிபர் சாவு

தந்தை வேலைக்கு செல்ல சொன்னதால் விபரீதம் போலீசார் விசாரணை
விஷம் குடித்து வாலிபர் சாவு
Published on

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மேல் கொடுங்கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர் (வயது 45) விவசாயி. இவருடைய மகன் கார்த்திக் (18). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மனோகர் கார்த்தியை ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என்று கண்டித்ததாக தெரிகிறது. பின்னர் கீழ்க்கடுங்காலூர் கிராமத்தில் நடைபெற்ற பாட்டு கச்சேரி நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மனைவி சரளாவுடன் சென்று விட்டார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த கார்த்திக் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வந்த பெற்றோர் கார்த்திக் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கார்த்திகை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கீழ் கொடுங்கலூர் போலீஸ் நிலையத்தில் மனோகர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com