வரப்பு ஓரங்களில் மற்ற பயிர்கள் விதைத்தால் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் - வேளாண் துறை அறிவுறுத்தல்

மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு பறவைகளுக்கு உணவாகவும், வெயில் காரணமாகவும் அழிக்கப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடுமலை பகுதிகளில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இம்மழையை பயன்படுத்தி, கோடை உழவு, சரிவுக்கு குறுக்காக மேற்கொள்ள வேண்டும். இதன் வழியாக, பெய்யும் மழை நீர் முழுவதும் நிலத்திற்குள் செல்வதால், சேமிக்க முடியும். 

மேலும், மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு பறவைகளுக்கு உணவாகவும், வெயில் காரணமாகவும் அழிக்கப்படுகிறது.

முதன்மைப் பயிர்கள், குறிப்பாக மக்காச்சோளம், சோளம், நெல் போன்ற சாகுபடி பயிர்கள் விதைக்கும் போது, பயறு வகைப்பயிர்களான, ெஹக்டருக்கு 5 கிலோ உளுந்து விதைத்தால் தீங்கு செய்யும் பூச்சி நோய்களை கவர்ந்து அழிக்கலாம். உளுந்து, தட்டை பயறு, பச்சை பயறு உள்ளிட்ட பயறு வகை பயிர்களை முதன்மைப் பயிராக விதைக்கும் போது சோளம் விதைகளை வரப்பு ஓரம் விதைத்து தீங்கு செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

பூச்சிகளை கவர்ந்து அழிக்கக்கூடிய இனக்கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தி தாய் அத்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து பூச்சிக்கொல்லி, பூஞ்சாணைக் கொல்லி பயன்படுத்துவதை குறைத்து அதிக லாபம் பெற முடியும். இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com