பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேருக்கு வலை வீச்சு

முன் விரோதத்தால் விபரீதம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேருக்கு வலை வீச்சு
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு ஊமையான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மதிமாறன் மனைவி அம்பிகா (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (50) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நடந்த 5-ந் தேதி குமார் (50) மற்றும் நந்தகுமார் (24) ஆகியோர் இடம் சம்மந்தமாக அம்பிகாவிடன் தகராறு செய்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும் அம்பிகாவை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த அம்பிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அம்பிகா ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com