அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மற்றும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று அரசு பொதுத்தேர்வு இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்பு தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 12-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com