காவேரிப்பட்ணடம் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தையை கட்டையால் அடித்த மகன் கைது

சுகவனம் அங்கிருந்த கட்டையை எடுத்து பால்ராஜை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. பால்ராஜ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
காவேரிப்பட்ணடம் அருகே சொத்து தகராறு காரணமாக தந்தையை கட்டையால் அடித்த மகன் கைது
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜமைதார்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது76). கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சுகவனம் என்ற மகன் உள்ளார்.

தந்தைக்கும், மகன் சுகவனத்திற்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சுகவனம் அங்கிருந்த கட்டையை எடுத்து பால்ராஜை சரமாரியாக தாக்கினார். இதை தடுக்க வந்த தாயையும் அவர் தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பால்ராஜை அக்கம் பக்கத்தினர் உடனே மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து பால்ராஜ் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகவனத்தை கைது செய்தனர்.

இதேபோல் சுகவனம் போலீசாரிடம் தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின்பேரில் தந்தை பால்ராஜ், தாய் தனலட்சுமி ஆகியோர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com