பாவூர்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ள கபிலன் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர்.
பாவூர்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கருமடையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சசி. இவரது மகன் கபிலன் (வயது17).

இவர் பிளஸ்-1 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் கபடி போட்டியில் கலந்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார். ஆனால் பிளஸ்-2 செல்ல விருப்பதால் படிக்குமாறு பெற்றோர் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கபிலன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி மற்றும் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com