கல்லூரி மாணவர்களிடையே இலவச சட்ட விழிப்புணர்வு

மாணவர்களின் சட்டங்கள் குறித்தான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் பதில் கூறி எடுத்துரைத்தனர். மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டால் வழக்கறிஞர்களை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கல்லூரி மாணவர்களிடையே இலவச சட்ட விழிப்புணர்வு
Published on

பொன்னேரி:

பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொன்னேரி அரசு மீன்வளத்துறை கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் பொன்னேரி வட்ட இலவச சட்ட உதவி மைய சேர்மன் மற்றும் முதன்மை சார்பு நீதிபதி பிரேமாவதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாணவர்களின் சட்டங்கள் குறித்தான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் பதில் கூறி எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்கள் இலவச சட்ட ஆலோசனைக்கு தொடர்பு கொண்டால் வழக்கறிஞர்களை ஏற்படுத்தி ஆலோசனை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதில் கூடுதல் சார்பு நீதிபதி பாஸ்கர், முதன்மை சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் தேவேந்திரன் பார் அசோசியேஷன் செயலாளர் வெங்கடேலு, வழக்கறிஞர் ஸ்ரீதர் பாபு மற்றும் கல்லூரி முதல்வர் ஜேஜே.ஷகிலா, மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com