சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
.
.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்காகவும் மற்றும் படையில் பணிபுரிவோரின் சார்ந்தோர்களுக்காகவும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு  வருகிற 1-ந்தேதி காலை 11 மணிக்கும், அதனைத்தொடர்ந்து நண்பகல் 12  மணியளவில் முப்படைவாரிய கூட்டமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளது.

மேற்படி குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களும் தங்களது கோரிக்கைகளை இரட்டைப் பிரதிகளில் விண்ணப்பம் வாயிலாக நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும், விண்ணப்பம் சமர்ப்பிக்கவுள்ள முன்னாள் படைவீரர்கள் 10 மணிக்குள் தங்களது விண்ணப்பத்தை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com