அரசு பஸ் மோதி கணவன் கண் எதிரே இளம்பெண் உடல் நசுங்கி பலி

காலை மணிகண்டன், மனைவி மற்றும் 3 குழந்தை களுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து சேலம் வந்தார்.கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த செண்பக வள்ளி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
அரசு பஸ் மோதி  கணவன் கண் எதிரே இளம்பெண் உடல் நசுங்கி பலி
Published on

சேலம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரை சேர்ந்தவர் மணி கண்டன் (30). இவரது மனைவி செண்பகவள்ளி (27).

இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருச்சியில் தள்ளு வண்டியில் சிப்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர். இன்று காலை மணிகண்டன், மனைவி மற்றும் 3 குழந்தை களுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து சேலம் வந்தார். பின்னர் அவர்கள் இன்று காலை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

உடல் நசுங்கி பலி

அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் பயணிகளை இறக்கி விட்டு சேலம் புதிய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த செண்பக வள்ளி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் அவர்மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செண்பகவள்ளி உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கண் எதிரே மனைவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com