லாரி மோதி வாலிபர் உடல் நசுங்கி சாவு

நண்பரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்
லாரி மோதி வாலிபர் உடல் நசுங்கி சாவு
Published on

ஆற்காடு:

ஆற்காடு குட்டைக்கரை தெருவை சேர்ந்தவர் முனுசாமி மகன் சதீஷ்(வயது37). இவர் அப்பகுதியில் உள்ள பைக் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு ராணிப்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார்.

பின்னர் நண்பரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் ஆற்காடு பழைய மேம்பாலம் அருகே வந்தபோது சென்னையிலிருந்து-வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி சதீஷின் பைக்கின் மீது மோதியது.

இதில் சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com