அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய ரோபோ

அரசு பள்ளி மாணவிகள் ரோபோ உருவாக்கினர் இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.
அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய ரோபோ
Published on

பொன்னமராவதி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் பணிமனை மூலம் 7-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக அட்டை பெட்டி, காகிதம், பழைய பொருட்களை கொண்டு ரோபோட்டுகள் உருவாக்கப்பட்டன. குப்பை சுத்தம் செய்யும் இயந்திரம், சுமை தூக்கும் ரோபோ, மலர் கொத்து வழங்குதல், விபத்துகளை தடுக்கும் வகையிலான கண்டறியும் கருவி போன்றவைகளை உருவாக்கி மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com