நாமக்கல் அருகே உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம்

நாமக்கல் அருகே உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி.
பயிற்சியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி.
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் வட்டார அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள் பிரதி நிதிகளுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நாமக்கல்லில் நடைபெற்றன.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுருளிகண்ணா, நாமகிரிப் பேட்டை சமூக நலத்துறை நிர்வாக அலுவலர் வித்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம், புதுச்சத்திரம் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய துணைத்தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

பயிற்சியில் பங்கேற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசின்திட்ட பணிகள், அங்கன்வாடி திட்டம், வளர் இளம் பெண்கள் திட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்த்தல், கர்ப்பிணி பெண்களுக்கான விழிப்புணர்வு, ஆரோக்கி யமான குழந்தைகள் கண்டறியும் முகாம், போஷன் அபியான் திட்டம், ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன.

பயிற்சியில் மேற் பார்வையாளர்கள் மல்லிகா, ரத்தினவள்ளி, செல்வராணி வட்டார ஒருங்கிணைப் பாளர் நித்யா, வட்டார திட்ட உதவியாளர் பரணி, ஈஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலை வர்கள், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com