பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி முருகன் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா

கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
கோபணம்பாளையம் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
கோபணம்பாளையம் பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

அதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பிராந்தகத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் உள்ள ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், அருணகிரிநாதர் மலையில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

விழாவில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வீடுகள் தோறும் பொதுமக்கள் விளக்கேற்றி தீப திருநாளை கொண்டாடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com