முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியாக சரிவு

மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடிக்கும் கீழ் குறைந்துள்ளது
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

பருவமழை கைகொடுத்த நிலையில் கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து பெய்த மழையால் 19 நாட்கள் அதே நீர்மட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டது.

மேலும் 50 நாட்களுக்கு மேலாக 140 அடியில் தண்ணீர் தேக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்-கு நீர்வரத்து 107 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 134.70 அடியாக உள்ளது. தமிழக பகுதிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 69.41 அடியாக உள்ளது. 401 கனஅடி நீர் வருகிறது. 269 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. 27 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.98 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com