குறைதீர் கூட்டத்தில் பட்டா வழங்க வேண்டும் என கிராமமக்கள் மனு

மயிலாடுதுறையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பட்டா வழங்க வேண்டும் என சின்னமேடு கிராமமக்கள் மனு கொடுத்தனர்.
சின்னமேடு மீனவ கிராம மக்கள் பட்டா வேண்டி மனு கொடுத்தனர்.
சின்னமேடு மீனவ கிராம மக்கள் பட்டா வேண்டி மனு கொடுத்தனர்.
Published on

தரங்கம்பாடி:

தரங்கம்பாடி தாலுக்கா சின்னமேடு மீனவ கிராமம் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் 168 மீனவ சமுதாய குடும்பத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் கொடு த்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக அரசு வழங்கிய சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறோம். சின்னமேடு பகுதியில் உள்ள இடங்கள், நிலங்களை எல்லாம் அரசுக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளோம். 

இதுவரைக்கும் நாங்கள் வசித்துவரும் சுனாமி குடியிருப்பு இடத்துக்கு பட்டா வழங்காமல் காலதாமதம் செய்கின்றனர். எங்களுடைய 168 குடும்பங்களின் விவரங்களை தரங்கம்பாடி தாசில்தார் மூலம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்துள்ளோம். எங்கள் மனு மீது கருணை கொண்டு பட்டா வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com