தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

திருமங்கலம் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலியானார். கவுதம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
விபத்தில் பலியான கவுதம் பிணமாக கிடக்கும் காட்சி.
விபத்தில் பலியான கவுதம் பிணமாக கிடக்கும் காட்சி.
Published on

திருமங்கலம்

மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் கவுதம் (வயது21). இவர் பைப் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் பணி நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை சென்று விட்டு மீண்டும் அவனியாபுரம் நோக்கி வந்தார். அவர் பாரபத்தி கியாஸ் கம்பெனி பகுதியில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற கவுதம் மீது மோதியது. இதில் கவுதம் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கூடக்கோவில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பலியான கவுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கவுதம் மீது மோதிய தனியார் பஸ் டிரைவர் முத்துக்கருப்பனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து பற்றி அறிந்த பொதுமக்கள், தனியார் பஸ்கள் அதிவேகமாக வந்து சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்களை முந்திசெல்ல முயற்சிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த விபத்தும் அதுபோல்தான் நடந்துள்ளது. எனவே போக்குவரத்து போலீசார் வேகமாக வரும் தனியார் பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com