கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் சாவு

மதுரை அருகே கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பலியானார். வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
கார் மோதி பைக்கில் சென்ற வாலிபர் சாவு
Published on

மதுரை

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். வண்டியூர் சுங்கச்சாவடி அருகே வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் முத்துக்குமார் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய தென்காசி மாவட்டம் குலசேகரபேரி, கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமியிடம் (வயது 29) விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com