ஆடு திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது

ஆடு திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சேடப்பட்டி போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வந்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.
ஆடு திருடிய கணவன்- மனைவி உள்பட 3 பேர் கைது
Published on

மதுரை

மதுரை அ.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (வயது36). இவர் சம்பவத்தன்று காலை வீட்டின் முன்பாக ஆட்டை கட்டி போட்டு விட்டு சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் ஆட்டை திருடி சென்று விட்டனர். இதுபற்றி பாண்டீஸ்வரி சேடபட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து சேடப்பட்டி போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து வந்து, போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். இதில் அவர்கள் வடக்குப்பட்டி மணிகண்டன் மகன் வினோத் பாண்டி (வயது 22), மேக்கிளார்பட்டி பாண்டி (30), அவரது மனைவி கவிதா (29) என்பது தெரியவந்தது. அவர்கள் ஆடு திருடியதை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து பாண்டீஸ்வரி வீட்டில் ஆடு திருடிய 3 பேரையும் சேடப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com