முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை

முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவர் உள்பட 2 பேர் தற்கொலை
Published on

மதுரை

மதுரை வில்லாபுரம் வேலுபிள்ளை தெருவை சேர்ந்தவர் அரிஹரன்(வயது59). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அரிஹரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநகர் 3வது ஸ்டாப் லயன் சிட்டியை சேர்ந்தவர் காளிராஜன். இவர் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் விரக்தியுடன் காணப்பட்டார். சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாழ்க்கையில் வெறுப்படைந்த காளிராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com