அலங்காநல்லூர் பேரூராட்சி தி.மு.க. வசமானது

அலங்காநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 11 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில்  15 வார்டுகள் உள்ளன. இங்கு பதிவான வாக்குகள் பரவை மங்கையற்கரசி கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன.

தொடக்கம் முதலே பெரும்பாலான வார்டுகளில்  தி.மு.க. முன்னணியில் இருந்து வந்தன. இறுதியில் 15 வார்டுகளில்  தி.மு-க. 11 வார்டுகளிலும், அ.தி.மு.க. ஒரு வார்டிலும், சுயேட்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் அலங்காநல்லூர் பேரூராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. கைப்பற்றியது. 

வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:

1வது வார்டு அபர்ணா (சுயேட்சை), 2வது வார்டு கலையரசன் (தி.மு.க.), 3வது வார்டு ரமணி கருத்தப்பாண்டியன் (தி.மு.க.), 4வது வார்டு ரேணுகாஈஸ்வரி (தி.மு.க.), 5வது வார்டு கோவிந்தராஜ் (தி.மு.க.), 6வது வார்டு நாட்டாமை சுந்தர் (அ.தி.மு.க.), 7வது வார்டு அம்சவள்ளி கண்ணன் (தி.மு.க.), 8வது வார்டு சேஷா ஜெயராமன் (தி.மு.க.), 9வது வார்டு தனலட்சுமி சசி (காங்கிரஸ்), 10வது வார்டு சர்மிளா சுந்தர் (சுயேட்சை), 11வது வார்டு மஞ்சுளா (தி.மு.க.), 12வது வார்டு பாண்டி (தி.மு.க.), 13வது வார்டு சுகப்பிரியா (சுயேட்சை), 14வது வார்டு பிரியா கார்ததிக் (தி.மு.க.), 15வது வார்டு சுவாமிநாதன் (தி.மு.க.).

X

Maalai Malar
www.maalaimalar.com