கூலித்தொழிலாளி விஷம் குடித்து சாவு

இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது.மனம் உடைந்து போன கோமாது நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
கூலித்தொழிலாளி விஷம் குடித்து சாவு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஜெகதேவி பகுதியைச் சேர்ந்தவர் கோமாது (வயது48). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தும் எந்தவித பலன் அளிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து போன கோமாது நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com