கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்
கிணற்றில்  விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
Published on

கரூர்:

கரூர் மாவட்டம் புகளூர் அருகே முருகம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது50), விவசாயி. இவரது பசு மாடு அருகில் உள்ள கிணற்றில் விழுந்தது. இதுகுறித்து பழனிச்சாமி வேலாயுதம் பாளையம் தீய ணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பசுமாட்டை உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளர் பழனிச்சாமியிடம் ஒப்படைத்தனர்

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com