கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அணையிலிருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.பாரூர் பெரிய ஏரி, பாம்பாறு அணை மற்றும் சூளகிரி அருகே சின்னாறு அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை.
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து நேற்று அதிகரித்தது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 265 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 443 கனஅடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 41.33 அடியாக இருந்தது.

கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 168 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 220 கனஅடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து ஊற்றுக் கால்வாயில் விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 46.35 இருந்தது. பாரூர் பெரிய ஏரி, பாம்பாறு அணை மற்றும் சூளகிரி அருகே சின்னாறு அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com