டிரைவர் விஷம் குடித்து சாவு

குடும்பத்தகராறு காரணமாக செந்தில்குமார் மிகவும் மனவேதனை அடைந்தார்.பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்
டிரைவர் விஷம் குடித்து சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பூதநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது47). டிரைவர். இவர் குடும்பத்தகராறு காரணமாக மிகவும் மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது செந்தில்குமார் பூச்சி மருந்து குடித்து விட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தகவலறிந்து உடனே அங்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com