ஒட்டன்சத்திரம் அருகே மாம்பாறை முனியப்பன் கோவிலில் ஏராளமான ஆண்கள் வழிபாடு

ஒட்டன்சத்திரம் அருகே மாம்பாறை முனியப்பன் கோவிலில் ஏராளமான ஆண்கள் வழிபாடு நடத்தினர்மாம்பாறை முனியப்பன் கோவில், ஆண்கள் வழிபாடு
சாமி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள்.
சாமி தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள்.
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பிரசித்தி பெற்ற மாம்பாறை முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்திலும், ஓணம் பண்டிகை நாட்களிலும் இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். ஆடி அமாவாசை மற்றும் ஆடி பெருக்கு நாட்களில் கிடாவெட்டி நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு செய்வார்கள். நேற்று ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கரூர், அரவக்குறிச்சி, நாமக்கல், பரமத்திவேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் கோவில் வளாகத்தில் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த மாதம் முழுவதும் முனி யப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் பாதுகாப்பு கருதி போலீசார் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com