கோட்டக்குப்பம் அருகே விபத்து சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலி

சரண் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். பலத்த காயமடைந்த சரண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர்.
கோட்டக்குப்பம் அருகே விபத்து சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலி
Published on

விழுப்புரம்:

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோட்ட க்குப்பம் பகுதிக்கு வருகிறார். கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்த உள்ளார். இற்காக அ.ம.மு.க. வினர் புதுச்சேரி -மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை யில் கொடி கட்டுவது, தோரணங்கள் மற்றும் வாழைமரங்கள் கட்டுவது போன்ற பணிகளில் கூலித் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்தனர்.

அப்போது பிள்ளை ச்சாவடி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையின் ஒருபுறம் கொடி, வாழை மரங்களை கட்டிய ஒட்டை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சரண் (வயது 18) சாலையை கடக்க முயற்சித்துள்ளார். மரக்காணத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த வேன் அப்போது சரண் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர். தகவலறிந்து விரைந்து வந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் விபத்து ஏற்படுத்திய வேன் புதுச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்தது என்பதும், வேன் டிரைவர் தப்பி ஓடியதும் போலீசாருக்கு தெரியவந்தது. வேனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்னறர்.

X

Maalai Malar
www.maalaimalar.com