பயணிகளை ஏற்றுவதில் தகராறு- கண்டக்டரை தாக்கிய மினி பஸ் டிரைவர் கைது

பயணிகளை ஏற்றி இறக்குவதில் ஏற்பட்ட தகராறில் கண்டக்டரை தாக்கிய மினி பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பயணிகளை ஏற்றுவதில் தகராறு- கண்டக்டரை தாக்கிய மினி பஸ் டிரைவர் கைது
Published on

தேனி:

தேனி அருகே கொடுவிலார்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது18). தேனி- பழனிசெட்டிபட்டி வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனிசெட்டிபட்டி நோக்கி மினி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு மினி பஸ் நேரம் தவறி பயணிகளை ஏற்றினர். இதனை மாரிச்செல்வம் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் மாரிச்செல்வம் மற்றும் மற்றொரு மினி பஸ் டிரைவர் பாண்டி மற்றும் கண்டக்டர் ராஜேஷ் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மாரிச்செல்வத்தை தாக்கி மிரட்டி உள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து டிரைவர் பாண்டியை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com