மனைவியுடன் கருத்து வேறுபாடு: அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு: அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

மதுரை:

மதுரை உசிலம்பட்டி பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). அரசு பஸ் டிரைவர்.

கோவையில் வேலை பார்த்த இவர், வேலைப் பளு காரணமாக உசிலம்பட்டிக்கு வருவதை குறைத்துக் கொண்டார்.

இதனால் ரமேசுக்கும், அவரது மனைவி சண்முக வள்ளிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக உசிலம்பட்டி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மேலூரை அடுத்துள்ள திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் மனைவி ராஜேஸ்வரி (49). இவருக்கு நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாக வில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராஜேஸ்வரி சம்பவத்தன்று காலை வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com