திண்டுக்கல்லில் புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல்லில் புகையிலை, குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல்
Published on

குள்ளனம்பட்டி:

தமிழகத்தில் புகையிலை, குட்கா பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் மறைமுகமாக கூடுதல் விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று கண்காணித்தபோதும் புகையிலை, குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.

திண்டுக்கல் மேற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவூத் தலைமயிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் நத்தத்தை சேர்ந்த நவாஸ்கான் (31) என்பவர் புகையிலை மற்றும் குட்கா பாக்குகள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com