திண்டுக்கல்லில் தி.மு.க. மறியல் ஐ.பெரியசாமி உள்பட 200 பேர் கைது

திண்டுக்கல்லில் தி.மு.க. சார்பில் நடந்த மறியல் போராட்டத்தையடுத்து ஐ.பெரியசாமி உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh
திண்டுக்கல்லில் தி.மு.க. மறியல் ஐ.பெரியசாமி உள்பட 200 பேர் கைது
Published on

திண்டுக்கல்:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தன.

மேலும் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் பஷீர்அகமது, பட்டிமன்ற நடுவர் லியோனி, துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ம.திமு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com