திண்டுக்கல் மாநகராட்சி அதிரடி: கொசு உற்பத்தியை தடுக்காத வீட்டு வசதி வாரியத்திற்கு அபராதம்

கொசு உற்பத்திக்கு காரணமான வீட்டுவசதி வாரியத்திற்கு ரூ.1 லட்சம் திண்டுக்கல் மாநகராட்சி அபராதம் விதித்து உள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி அதிரடி: கொசு உற்பத்தியை தடுக்காத வீட்டு வசதி வாரியத்திற்கு அபராதம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் பஸ்நிலையம் அருகே வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் காலி செய்து நீண்ட காலமான பின்பும், இந்த கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது. இதனால் வீடுகளின் தொட்டிகளில் தேங்கியுள்ள மழைநீர் கொசு உற்பத்திக்கு காரணமாக உள்ளது.

இதேபோல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீடு அருகே வீட்டுவசதி வாரியத்தின் சேதமடைந்த குடியிருப்பு உள்ளது.

இதில் தேங்கியுள்ள மழைநீரில் கொசுப்புழு உற்பத்தியாகிறது. இக்குடியிருப்புகளில் ஆய்வு செய்த திண்டுக்கல் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாகக்கூறி ரூ.1லட்சம் அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் அனிதா கூறியதாவது, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் யாரும் தங்கவில்லை. இந்த கட்டிடம் இடித்து அகற்றப்படாததால் புதர்மண்டி, மழைநீர் தேங்கி கொசு உற்பத்திக்கூடமாக உள்ளது.

இதையடுத்து வீட்டுவசதி வாரியத்துக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com