ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சனிபகவான் அபிஷேக கட்டணம் ரூ.300 ஆக திடீர் உயர்வு - பக்தர்கள் வாக்குவாதம்

ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சனிபகவான் அபிஷேக கட்டணம் ரூ.300 ஆக திடீடென உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சனிபகவான் அபிஷேக கட்டணம் ரூ.300 ஆக திடீர் உயர்வு - பக்தர்கள் வாக்குவாதம்
Published on

நகரி:

ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சனிபெயர்ச்சியையொட்டி நேற்று அங்குள்ள சனிபகவானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். சனிபகவானுக்கு அபிஷேகம் செய்ய கட்டணம் ரூ.150-ஆக இருந்தது.

ஆனால் நேற்று திடீரென்று முன்னறிவிப்பின்றி அபிஷேக கட்டணத்தை ரூ.300ஆக உயர்த்தி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எந்த அறிவிப்பும் செய்யாமல் கட்டணத்தை இரு மடங்காக எப்படி உயர்த்தலாம் என்று கேள்வி கேட்டனர். இதையடுத்து பக்தர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com