தேவதானப்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தேவதானப்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் தற்கொலை
பெண் தற்கொலை
Published on

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி ஜி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ரேணுகாதேவி (வயது 30). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை வீட்டில் இருந்த அவருடைய குழந்தை அழுதுகொண்டு இருந்தது.

குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது ரேணுகாதேவி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ரேணுகாதேவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com