தேவதானப்பட்டியில் இரவு முழுவதும் மின் தடையால் மக்கள் தவிப்பு

தேவதானப்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இரவு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
தேவதானப்பட்டியில் இரவு முழுவதும் மின் தடையால் மக்கள் தவிப்பு
Published on

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பெரியகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகள் நிரம்பி வருகிறது.

தேவதானப்பட்டியில் நேற்று இரவு 9.40 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மின் வினியோகம் சீராகும் என பொதுமக்கள் தூங்காமல் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

மழை காரணமாக பனிப் பொழிவும் இருந்ததால் வீட்டுக்குள்ளும் தூங்க முடியாமல் கொசுக்கடியால் வெளியிலும் தூங்க முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

இன்று காலை வரை மின் வினியோகம் சீராகவில்லை. இதனால் மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வீட்டு அன்றாட தேவைகளுக்கும் மின் சாதனங்களை இயக்க முடியாத நிலை உருவானது. மின் வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்ட போது யாரும் பதிலளிக்க வில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com